நினைவை விட்டு அகலாதோர்..

Tuesday, June 14, 2011 · 0 comments

இன்று சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கையின் மனிதஉரிமை மீறல் தொடர்பான ஒளித்தொகுப்புக் காட்சிகள் வெளியாக உள்ள இவ்வேளையில் மனதில் ஓர் இனம்புரியாத ஓர் உணர்வு. இதைக் கவலை என்பதா, ஆதங்கம் என்பதா, இயலாமை என்பதா என்னவென்றே பொருள்கொள்ள முடியாததாக அனைத்தும் கலந்ததான ஓர் உணர்வு.

ஒரு இனம் தான் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக எத்தனை துன்பங்கள், எத்தனை அவலங்கள். இவற்றையெல்லாம் மதிக்காது ஒரு சில தனிமனிதர்களின் நலனிற்காக ஒரு இனத்தையே எப்படியாக அடக்குகின்றார்கள்.

இந்தவேளையில் இம் மக்களிற்காக, இத் தமிழ் இனத்திற்காக, எமக்காக எம்மில் இருந்து போராடப் புயலாகப் புறப்பட்டு எமக்காய் தம் உயிர்களை உவந்தளித்த அந்த உத்தமர்கள் நினைவுகள் எண்ண அலைகளில் தொடர்கின்றன. தான் வாழவன்று உறவுகள் வாழவேண்டும் என்பதற்காய் தமது ஆசைகளைப் புறந்தள்ளிக் களமாடிக் கண்மூடிய கண்மணிகள் எத்தனைபேர்…

தான் வாழவேண்டும் தன் குடும்பம் வாழவேண்டும் என்று தனக்கு ஆலவட்டம் பிடிக்கும் பலபேர் மத்தியில் தான் சார்ந்த இனத்து மக்கள் முன் சுடுகலன் நீட்டப்பட்ட போதெல்லாம் தம்மைக் கொடையாக்கி அம் மக்களைக் காத்த காவிய வேங்ளைகளின் இனிய முகங்களை எப்படி மறந்தொதுக்க முடியும்… எத்தனை காலம் தான் சென்றாலும் வானும், கடலும், தரையும் உள்ளவரை அவர்கள் முகங்களும் வந்து போகும்…


எதிலும் போராட்டம்....

Wednesday, May 18, 2011 · 0 comments

நியாயமான தனது செயலிற்காகவும் அதை உறுதிப்படுத்துவதற்காகவும் தமிழன் என்றும் போராட வேண்டியுள்ளது. இலங்கைத் தீவிலே தமிழின அழிப்பு உச்சக் கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளையில் அதனை நிறுத்தக்கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது தெரிந்ததே. அந்தவகையில் இங்கிலாந்திலே பரமேஸ்வரன் உணவு மறுப்புப் போராட்டத்தில் இறங்கியிருந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் மக்டொனால்ட் உணவினை உட்கொண்டவாறு இருந்தார் எனப் பிரித்தானியப் பத்திரிகைகள் பரமேஸ்வரன் மீது பொய்க்குற்றம் சுமத்தியிருந்தன. அதனை எதிர்த்து அவர் மேற்கொண்ட வழக்கில் வெற்றிபெற்றிருந்தார். அவரது வழக்கு விபரம் தொடர்பான தகவல்களை பிரித்தானி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது தொலைக்காட்சியில் விபரணமாக ஒளிபரப்பியிருந்தது. அவ்விபரணத் தொகுப்பு இங்கே இணைக்கபட்பட்டுள்ளது.

கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடும் பெண்கள்

Tuesday, May 17, 2011 · 0 comments

போரின் பின்னர் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபடும் பெண்கள் தொடர்பான ஓர் விபரண ஒளிச்சித்திரம்




நன்றி அல்ஜசீரா

Watch Al Jazeera on Live

Thursday, April 21, 2011 · 0 comments

கிடைத்தற்கரிய தலைவர்களில் ஒருவர்

Saturday, April 16, 2011 · 0 comments

தமிழகத்திற்குக் கிடைத்த கிடைத்தற்கரிய தலைவர்களில் ஒருவரான திரு. காமராஜர் அவர்களது வாழ்க்கை பற்றி திரு. நெல்லை கண்ணன் அவர்கள் ஆற்றிய உரை. திரு. காமராஜர் போன்ற தலைவர் இனியும் தமிழகத்திற்கு வாய்பாரா?




பார்த்திருப்பு

Saturday, April 02, 2011 · 0 comments

சூடு சொரணையற்ற தமிழர்
நாம் என்பதால்

பார்த்திருப்பு

அன்று
கூட்டாக கொல்கையில்
இன்று
கொன்றவனில் யார் சிறந்த கிரிக்கட்காரன்

கோழை!

Monday, March 07, 2011 · 1 comments

இக் காலத்திலே மேற்கத்தைய இசைவடிவத்துடன் மீதான காதலால் பிரபலமடைந்த வரும் சொல்லிசையினில் பாடல்களைப் பல இளைஞர்கள் படைத்து வருகின்றனர். இதில் சுஜீத்.ஜீ குறிப்பிடத்தக்கவராகக் காணப்படுகின்றார். பல்வேறு சமூக மேம்பாடு தொடர்பான பாடல்களைத் தனது இசையின் மூலம் வெளிக்கொணரும் இவ்விளைஞரது மிகவும் அண்மைய வெளியீடான இராணவன் என்னும் இசைத்தொகுப்பில் வெளிவந்துள்ள “கோழை..” என ஆரம்பிக்கும் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகக் இருக்கின்றது. 

இப்பாடலினை ஏற்கனவே கேட்டாலும் திரும்பத் திரும்ப கேட்க வைக்கின்றது. சமூக அக்கறையுடன் சமூகத்தில் இருக்கும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டும் இவ்விளைஞனின் சில பாடல்கள் இங்கே.... இவ்விளைஞனின் இணைய முகவரி http://sujeethg.me/
இவரது youtube இணைய முகவரி http://www.youtube.com/user/therappinglyricist

கோழை பாடல்...

கதையல்ல நிஜம்...



பாடல்வரிகள்... விஷம் (இது கதையல்ல நிஜம்”

இது கதையல்ல நிஜம் – இப்
புலம் பெயர் வாழ்க்கையில் ஊறும் விஷம்
அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு -
ஆகவில்லை இன்னும் பதினைஞ்சு
கேட்டதவள் பாசம், அன்பாய் சின்ன நேசம்
கிடைக்கேல்லை பாசம், நேசம் -
வாழ்க்கை ஆகிப்போனதடா வேஷம்
அப்பா அம்மா அவளில் காட்டவில்லை நேசம்
கடையிலே பணத்திற்கா வாங்கலாம் பாசம்
அப்பா ரெண்டு வேலை – வரலாம்
காலை மாலை – வந்தால்க் கூடத்
தூக்கம், அஞ்சு கண்ணில் ஏக்கம்
அப்பா என்னைப் பாருங்கோ அஞ்சு எண்டு கொஞ்சுங்கோ
அம்மா அம்மா சொல்லுங்கோ அப்பாவிட்டச் சொல்லுங்கோ
அம்மா கண்ணில்க் கவலை காரணம் பிஞ்சு அஞ்சு இல்லை
அவள் முன்னே சின்னத்திரை அம்மா சின்னத்திரைக் கிரை
ஐயோ பிஞ்சு பாவம் பாசம் எண்டு தாகம்
புலம் பெயர் நாட்டினில யாரிட்டத் தேடிப்போகும்
நாடு விட்டு நாடு வந்தாள் வீட்டில் அன்பிழந்தாள்
தெருவில் வாடுகிறாள் அன்பதைத் தேடுகிறாள்
அப்பாவும் மாறவில்லை அம்மாவும் மீளவில்லை
வருடங்கள் ஓடியது வயசும் ஓடியது
வீட்டிலே சேர்ந்திருந்தும் தனிமை வாட்டியது
நண்பர்கள் சேரவில்லை சேர்ந்தவர் சரியில்லை
நல்லவர் தேடிச்செல்லும் வழியும் தெரியவில்லை
என்ன செய்வாள் அஞ்சு இன்னும் அவள் பிஞ்சு
அன்பு வந்துபோச்சு காதல் என்று பேச்சு
கண்டவுடன் காதல் வீட்டில் கடும் மோதல்
வீட்டைவிட்டுப் பிரிந்து குடும்பம் தனியானாள்
வருடமும் போகக் குழந்தைக்குத் தாயானாள்
சிலகாலம் போச்சு சிக்கல்கள் உருவாச்சு
அன்பு தந்த காதல் எங்கோ ஓடிப்போச்சு
பாசம் வற்றியாச்சு சண்டை முற்றிப்போச்சு
மண வாழ்க்கை முறிந்து உறவு பிரிந்தாச்சு
கைகளிலே மழலை கண்களின் வழி கண்ணீர் மழை
இது கதையல்ல நிஜம் – இப்
புலம் பெயர் வாழ்க்கையில் ஊறும் விஷம்
அஞ்சோ இன்னும் பிஞ்சு அவளுக்கோர் குஞ்சு
பிள்ளை தந்த பாசம் ஓடிற்று சில மாசம்
பிள்ளையோடு கொஞ்சி கொஞ்சி, நேரம் செலவிட
வேலைக்கு நேரம் போச்சு வேலையே ஒர் நாள் போச்சு
கைகளில் காசு இல்லை உதவ யாரும் இல்லை
செய்வது என்ன வென்று அவளுக்குப் புரியவில்லை
கடையில களவெடுத்து மரியாதை மீளவில்லை
அஞ்சு கதை வெளியாச்சு ஊர் முழுக்க இது பேச்சு
அரசுக்கும் கதை போச்சு அஞ்சு பிள்ளை பறிபோச்சு
மறுபடி தெருவில ஊர் சனம் சேரவில்லை
பிள்ளையதும்; போனதால உயிரில் ஜீவன் இல்லை
அஞ்சு தடம் புரண்டு போதைக்கடிமையானாள்
வந்தவை போனவையோட ராவில் சுத்தலானாள்
அஞ்சு வாழ்க்கை மாறிப்போச்சு மானம் மலை ஏறிப்போச்சு
என்ன செய்வாள் அஞ்சு இன்னும் அவள் பிஞ்சு
என்ன செய்தும் முடியேல்ல பாசம் நேசம் கிடைக்கேல்ல
கண்ணாடி முன்னால நின்று இருந்தென்ன பயன் நான் வாழ்ந்தென்ன பயன்
கேட்ட கேள்விக்குப் பதில் இல்ல வாழ்வை முடிப்பதில் பிழை இல்லை
கதறினாள் அஞ்சு அவள் குடிக்கிறாள் நஞ்சு
வாழும் போது உதவாதவர் சாகும்போது தடுக்கிறார்
அஞ்சு அவளை அள்ளிக் கொண்டு வைத்தியரிடம் சேர்க்கிறார்
அஞ்சு அவள் விழி திறக்க பிள்ளை நிற்கக் காண்கிறாள்
ஐயோ என்னிலை வருமோ என்று விழிகள் இறுக்க மூடுகிறாள்
உயிரை துறக்க மூடுகிறாள்
இது கதையல்ல நிஜம் – இப்
புலம் பெயர் வாழ்க்கையில் ஊறும் விஷம்
அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு -
ஆகவில்லை இன்னும் இருவத்தஞ்சு


அடிமேல் அடிபட்டு...


39 மனைவிகள், 94 பிள்ளைகள் மற்றும் 33 பேரப்பிள்ளைகள்

Wednesday, February 23, 2011 · 0 comments

குடும்பத்துடன்....
இந்தியாவின் வடபிரதேசத்தில் உள்ள ஓர் ஊரில் 39 துணைவிமார், 94 பிள்ளைகள் மற்றும் 39 பேரப்பிள்ளைகளுடன் 66 வயது மனிதர் வாழ்ந்து வருகின்றார்.

பர்மா மற்றும் பங்களாதேஸ் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள மிசோரம் எனனும் மலைப்பகுதிக் கிராமத்திலேயே இவர் வாழ்ந்து வருகின்றார். இவர்கள் அனைவரும் நூறு அறைகளைக் கொண்ட நான்குமாடிக் கட்டடம் ஒன்றிலேயே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமையறையை மாத்திரம் கொண்டிருக்கும் இக் கட்டடத்தில் இவரது துணைவிகள் முறையெடுத்து சமைத்து வருகின்றனர். திருமணம் முடித்த இவரது மகன்களும் இக் கட்டடத்திலேயே வேறு வேறு அறைகளில் வாழ்கின்றார்கள்.

"நான் ஒரு தடவை ஒரு வருடத்தில் பத்து திருமணங்கள் செய்திருக்கின்றேன்" என்கிறார் இச்சாதனைக்குச் சொந்தக்காரரான சியோனா சானா. அதனுடன் "இப்பொழுது கூட எனது குடும்பத்தினை விரிவுபடுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன், திருமணம் செய்வதற்கு எத்தகைய செயலையும் செய்யத்தயாராக இருக்கின்றேன்" என்றார்.

அனைவரும் தங்கும் வீடு...
துணைவியருடன்..

தகவல்: TeleGraph

அலட்சியமாய் இருப்பதன் விளைவு

Thursday, February 17, 2011 · 0 comments

கனடாவில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இராணுவத் தளபதி ஒருவர் தொடராகப் பெண்களது உள்ளாடைகள் திருடியதும் இரண்டு பெண்களைக் கொலை செய்ததும் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. அதன் பின்னர் அவ் இராணுவத் தளபதி தன் தவறுகளை ஏற்றுக் கொண்டதுடன் அவரிற்கு இரட்டை ஆயுட்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
கனடிய முன்னாள் இராணுவ அதிகாரி தொடர்பான செய்திகளின் தொகுப்பிற்கு இங்கே செல்லவும்
http://en.wikipedia.org/wiki/Russell_Williams

இன்று ஒரு தொலைக்காட்சித் தொடரினைப் பார்த்த போது கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு நிகழ்வு இந்தியாவின் மாநிலம் ஒன்றில் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார்கள். அவ்வொளித்தொகுப்பினை கீழுள்ள இணைப்பில் பார்வையிடலாம்.


அத்துடன் இதற்கு ஓர் காரணமாக அமையும் நிகழ்வு ஒன்று தொடர்பாக நான் முன்னர் எழுதிய ஆக்கம் ஒன்றினை கீழுள்ள இணைப்பில் காணலாம்.

"சிறுவர்களும் உறவினர்களும்"http://justopentalk.blogspot.com/2010/02/blog-post_24.html

உலகக் காதலர் தினம்

Tuesday, February 15, 2011 · 0 comments

பிறக்கின்ற ஒவ்வொரு ஆண்டிலும்
பெப்ரவரி 14ம் திகதி
பூமிப்பந்தின் நாடுகளெல்லாம்
பூப்பெய்திய திருக்கோலம்



உலகக் காதலர் தினம்

வான வேடிக்கைகளின் பவனி
வாழ்த்து மடல்களின் பரிமாற்றம்
இதழ்களின் முத்த முத்திரியை
விருப்பமுடன் இடம்மாற்றும்
லீலைகளில் காதலர்கள்

காதல்தான் உலகம்
காதல்தான் வாழ்க்கை
காதல்தான் உயிர்
காதல்தான் மனிதன் என
ஊடகங்களின் மொத்தமான
உரத்த பறையடிப்பு

சர்வம் காதல் மயம் - என்னும்
கோசத்தை ஏந்தி
சங்கீதமாய் உலாவரும்
அன்றைய காற்று

இளமைதான் தேசங்களின்
இயங்கு நிலைச் சக்தி - இருந்தாலும்
அவர்களுக்கும் காதல்தானாம் முத்தி

சூரியனின் காதல்தான் தாமரை
பனித்துளியின் காதல்தான் புல்நுனி
நேரிய நல்வாழ்க்கைப் பாதைக்கே
நிழல்தரும் மேகங்கள் காதல்தானாம்

காதல் ஒரு கடவுள்
தொடுகை இல்லை
தெரிவதில்லை
நுகர்வதில்லை
அறிதலில்லை
உணர்தல் மட்டுமே முடியும்

அன்றுதான் சந்தோச ரேகைகள்
உலகெங்கும் பரவும் நாள்
மத்தாப்பாய் இன்பங்கள்
மனசெங்கும் நிரவும் நாள்
காற்று மண்டலக் கூடுகளிலெல்லாம்
கனவுப் பறவைகள் குடிபுகும் நாள்

இதுபோலத்தான் அன்றும்
ஆண்டு 2001
பெப்ரவரி 14
உலகத்து நாடுகளிலெல்லாம்
அன்றும் தான் காதலர்தினம்
உள்ள+ரில்
தமிழர்களிற்கு மட்டும்
ஓய்வான காலமது

பூமித்தாயின் நெற்றிப் பொட்டாய்
உருவாகத் துடிக்கின்ற ஒரு நாடு
தமிழீழம்
ஆமி என்னும் சிங்களப் படைகளினால்
ஆக்கிரமித்தல் கண்ட ஒரு நாடு
தமிழீழம்

உலகெங்கும் அன்று காதலர்தினம்
உள்ள+ரில் தமிழரிற்கு ஓய்வான காலம்

உலகத்தை எங்கள் மேல்
கவனிக்கச் சொல்லி
ஒருதலைப் பட்சமாய்
போரோய்வு பேணி
அழிவுள்ளும் சலியாது
வாழ்கின்ற தமிழர்
அன்றைக்கும் அமைதியாய்
இருந்திட்ட காலம்

பளைப்பகுதியின் காவலரண்
துப்பாக்கி இருந்தும்
சுடாத எம் படையணிகள்
அழைப்பின்றி வருகின்ற
பகைவரது முன்னேற்றம்
ஆறுதலாய் கவனிக்கும்
எம்மவரின் மதிநுட்பம்

இருந்தாலும் என்ன செய்வது?

பேரினவாதிகளின் பெருஞ்சமருக்காய்
எறிகணைகள் மழையாகி
ஊரையே உலுக்கியது

எம்மவரும் பாதுகாப்பாய்
நிலையெடுக்கும் நேரத்தில்
ஒவ்வொரு வெடியதிர்வும்
உள்நுழையத் தொடங்கியது

அம்மா….

என் நண்பன் ஒருவனது
உயிர் உறையும்
ஒர் அலறல்

கரும்புகை மண்டலத்தில்
கண்ட காட்சியிலும் கரிப்படிவு
ஒரு கால் சிதைந்த நிலையில்
என் போராளித் தோழனின் திருவுருவம்
காலில் இருந்து குருதியும்
முகத்தில் இருந்து வியர்வையும் வழிந்தபோதும்
புரட்சியின் தூய்மையை
அந்த உருவம்
சிந்திக் கொண்டிருந்தது

“நாம் சண்டையை விரும்பவில்லை
உயிர்வாழ வேண்டுமானால்
சண்டையை விட வேறுவழியில்லை”
அவன் அணிந்திருந்த
வரிச்சீருடையில் மறைந்திருந்த வரிகள்
இதுதானோ

இரவு வானொலிச் செய்திகளில்
இதயங்களை மகிழ்வித்த
காதலர் தினம்
சிறப்பு நிகழ்ச்சிகளாய்

உண்மைதான்

உலகெல்லாம் அன்று
காதலர் தினம்
என் உயிர்த் தோழனுக்கோ
அது கால் இழந்த தினம்

இப்படித்தான் எங்களது வாழ்க்கைப்பாடு
இனி வருகின்ற
மனித உரிமைகள் தினத்தன்று
எங்கள் உயிர்கூடப் பறிக்கப்படலாம் - ஆனால்
ஈழத்தமிழனை ஒருபோதும்
காலச் சருகுகள் மூடாது – மாறாக
காலைச் சூரியன்
தினம் பாடும்

-கவியாக்கம்: கு.வீரா

தவறான வழித்தடத்தில் கார் ஓட்டிய 83 வயது முதியவர்

Thursday, February 10, 2011 · 0 comments

ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்ணியா மாநிலத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் ஓடும் பக்கத்திற்கு எதிராக தனது வாகனத்தினை 83 வயதுள்ள முதியவர் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இக் காட்சியினை அவ்வீதியில் பயணம் செய்த இன்னொருவர் தனது தொலைபேசி மூலம் ஒளிப்படமாக்கியுள்ளார்.

மிகவும் ஆபத்தான இவ்வாகன ஓட்டுதலின்போது அம் முதியவர் இன்னொரு வாகனத்துடன் மோதி அதன் பின் வீதியைப் பிரிக்கும் தடுப்புச் சுவருடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார். இச்சம்பவத்தின் போது எவரும் பாரிய காயங்களிற்கு உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


விலையா(போ)கும் ஆண்கள்

Monday, February 07, 2011 · 1 comments

தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது இடம்பெற்ற சிறிய சம்பவம் ஆண்கள் விலைபோகின்றார்களோ என்ற கேள்வியை என் மனதிலே எழுப்பியுள்ளது.

திருமணம் என்னும் சந்தையில் ஆண்கள் வியாபாரப் பொருட்கள் ஆவதும் சீதனம் என்னும் பெயரில் பெண்வீட்டுக்காரர் அவர்களை விலைகொடுத்து வாங்குவதும் மிகவும் ஒரு சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டுள்ளது. இவ்வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களினை ஆண்கள் தாங்களே நிர்ணயிக்கின்றார்களா அல்லது அவர்களது பெற்றோர் நிர்ணயிக்கிறார்களா என்பது மிகவும் கேள்விக்குரிய ஒரு விடயமாக உள்ளது.

அதனைவிட ஓர் திருமணமாகும் வயதில் உள்ள ஆணிற்கான விலை தொடர்பாக அவர் வசிக்கும் இடமும் தகுந்த இடம் வகிக்கின்றது. குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களிடையே புலம்பெயர்ந்து மேற்குலகில் வசிக்கும் ஒரு ஆணிற்கு ஒரு விலையும் உள்நாட்டிலேயே இருக்கும் ஆணிற்கு ஒரு விலையும் குறிக்கப்பட்டுள்ளது. அவ்விலையினை விடக் குறைவாக அல்லது சீதனமே வாங்காது ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முன்வந்தால் அவ் ஆணிற்கு ஓதோ ஒரு குறை இருப்பதாகவும் எண்ணுகின்றார்கள்.

இச் சீதனம் என்னும் இடியப்பச் சிக்கலில் அகப்பட்டுப் பலரது வாழ்வும் சீரழிக்கப்பட்டுக் கொண்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையானதும் அனைவரும் அறிந்த உண்மையும் ஆகும். இது தொடர்பாகப் பல கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

இதிலே ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்படும் விடயமானது தனது மகனை மருமகள் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டாள் என ஆணினைப் பெற்ற பெற்றோர் குறைபடுவதும் தமது சகோதரனை அவனின் துணைவி தம்மிடம் இருந்து பிரித்து விட்டாள் என சகோதரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டும் ஆகும்.

என்னைப் பொறுத்தவரையில் இது மிகவும் அடிப்படையில்லாக் குற்றச்சாட்டாகும். திருமணம் என்னும் சந்தையில் ஆண் ஆனவன் விற்கப்பட்டதன் பின்னர் அவ்விற்கப்பட்ட பொருளிற்கான உரிமையும் அதை வாங்கியவரிற்கே சொந்தமாகின்றது. அந்த வகையில் பார்க்கும் போது சீதனம் கைமாற்றல் நடைபெற்றவுடன் அவ் ஆண்மகனானவன் அப் பெண்ணிற்கே சொந்தமாகின்றான். ஆதலால் அவனை அவனது திருமணத்திற்கு முன்னரான வீட்டிலிருந்து பிரித்தெடுத்துக் கொள்ளும் முழு உரிமையும் அப் பெண்ணிற்கு வந்து சேர்கின்றது.

அவ்வாறு பிரித்தெடுக்காது அவ் ஆணின் மீது தாங்களும் உரிமை கொண்டாட வேண்டும் என்று அவனது குடும்பத்தார் முடிவு செய்வார்களேயானால் அவர்கள் சீதனம் என்னும் பேச்சினை எடுக்கக் கூடாது. இச் சீதனப் பேச்சிற்கு ஆண் வீட்டைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பங்களிக்கிறார்கள் என்பது மிகவும் மறுக்க முடியாத உண்மையாகும். தாமும் இவ்வாறு சீதனம் கொடுக்க வேண்டியவர்கள் என்பதை மறந்து அவர்கள் அதில் மும்மரமாக இருப்பது மிகவும் கவலைதரக் கூடிய விடயமாகும்.

அத்துடன்இ சீதனம் வாங்கித்தான் திருமணம் செய்யவேண்டும் என அடம்பிடிக்கும் ஆண்களைச் சோம்பேறிகள் என்றே கொள்ளவேண்டும். தாங்கள் திருமணம் முடித்து மகிழ்வோடு வாழவேண்டும் என்பதற்கா ஒரு பெண் கைநிறையப் பணத்துடன் வரவேண்டும் என எண்ணுவது மிகவும் தவறானதாகும்.


மிகவும் சிறந்த ஓர் காட்சிப்படுத்தல்


பாடல் ஒன்று


பேசா வார்த்தைகள்

· 0 comments

இரண்டு உள்ளங்களிற்கிடையே பேசப்படாத வார்த்தைகள் பேசப்படும் போது....

ஒரு இரசிகனின் நிலை

Monday, January 31, 2011 · 0 comments

நடிகனிற்காய் வால் பிடிக்கும் இளைஞர் கூட்டம் இதனால் தங்கள் வாழ்நாளினை இழக்கிறார்கள். நடிகன் தான் பணம் உழைப்பதற்காகவும் தன் புகழை மற்றவர்கள் பாடத் தான் கேட்பதற்காகவும் மட்டுமே இந்த இரசிகர் கூட்டம் எனப்படும் கூட்டத்தை வைத்திருக்கின்றானே தவிர, அந்த நடிகனின் படம் ஓடுவதாலோ அன்றி ஓடாமல் போவதாலே எந்தவொரு இரசிகனும் பலன் பெறப் போவதில்லை.

ஆயினும் இவ் அடிப்படை உண்டை விளங்காது பலரும் நடிகர்களிற்குப் பல்லக்குத் தூக்க விளைகின்றார்கள். இதனால் இழக்கப்படுவது இவ் அப்பாவிகளின் பணம் மட்டுமல்ல, அவர்களது நிம்மதியும் கூடவே இழக்கப்படுகின்றது. ஒரு நடிகனின் படம் ஓடாவிட்டாலே அதற்கு எதிராகக் கருத்துக் கூறினாலோ ஏதோ தன்னுடைய கௌரவம் குறைந்து விட்டது போன்றே இவர்கள் செயற்படுகின்றார்கள்.

ஏற்கனவே எத்தனையோ புறக்கணிக்கப்பட வேண்டிய பழக்க வழக்கங்களுள் கட்டுண்டு கிடக்கும் இச் சமூகத்தில் இந் நடிகர்களிற்குப் பல்லக்குத் தூக்கும் பழக்கமும் வேரூன்றி வருகின்றது. இதற்குக் காரணம் கல்வியறிவில் பின்தங்கியுள்ள நிலைமையா அன்றி தேவையற்ற பிடிவாதக்குணமா என்பதனை நடிகர்களைக் கடவுள்களாகப் பார்க்கும் புண்ணியவான்கள் தான் பதிலளிக்க வேண்டும்.


உரிமைகோரல்

Tuesday, January 25, 2011 · 0 comments

அண்மைக்காலமா மற்றையவர்களின் வேலையைத் தங்களது வேலையாக உரிமை கோரும் படலாம் வேகமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருந்து கொண்டு இணையத் தளச் செய்திச்சேவை தருகின்றோம் என்று புறப்படுபவர்களின் திருட்டினைச் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.

அந்தவகையில் இன்று ஓர் இணையத்தளத்தில் நடந்த திருட்டினை உங்கள் முன் வைப்பதே இப் பதிவின் நோக்கம்.


கடந்த வார விடுமுறையில் ரொறன்ரோ பெரும் பிராந்தியத்தில் நடைபெற்ற கனடியத் தமிழர் திரைப்படவிழா நிகழ்வு தொடர்பாக அந் நிகழ்வினைப் புகைப்படம் பிடித்தவர் தனது இணையத்தளத்தில் படங்கள் தரவேற்றியிருந்தார். அவ்விணையத்தளத்திலிருந்து அப் படங்களிற்கான இணைப்பு இங்கு உள்ளது நினைவுகள் .

அதேவேளை தமிழ்த்தாய் என்னும் இணையத்தளம் மேலே குறிப்பிட்ட புகைப்படப்பிடிப்பாளரின் தளத்தில் இருந்து அத்தனை படங்களையும் தரவிறக்கித் தங்களது watermark இனை உள்ளீடு செய்து ஏதோ தாங்கள் நிகழ்விற்குச் சென்று பிரத்தியேகமாகப் படங்கள் எடுத்தது போன்று தங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். அவ்விணைப்பு இங்கே.

இப்புகைப்படங்களினைத் தங்களின் watermark உள்ளீடு செய்யாது வெளியிட்டிருப்பின் மற்றையவரிற்கு சொந்தமான புகைப்படங்கள் அவருடையதாகவே இருந்திருக்கும். அதைவிடுத்து அவரது முழுப்புகைப்படத்திற்கும் தங்கள் watermark இனை உள்ளிட்டு அவரது வேலையைத் தங்களதாக்கியுள்ளார்கள். அதன் உரிமையாளரிற்கு குறைந்தது ஒரு நன்றி சொல்லியாவது வெளியிட்டிருக்கலாம். இவர்கள் எல்லாம் சமூகத்திற்கு செய்தி தருகிறார்களாம். இதெல்லாம் ஒரு பிழைப்பு. 

முழுவதும் இயற்கை வளங்களில் இயங்கும் பண்ணை

Friday, January 21, 2011 · 0 comments

இந்தியாவில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் அதன் நாளாந்த நடவடிக்கைக்குத் தேவையான வளங்களை இயற்கை வளங்களில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். இது தொடர்பாக ஒளித் தொகுப்பு ஒன்று இணையத்தில் காணக் கிடைத்தது. அவ்வொளித் தொகுப்பிற்கு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

கெஞ்சும் விஜய்

Monday, January 17, 2011 · 0 comments

இடியப்பச் சிக்கலில் இருந்து ஒருவாறு விடுவித்துத் தனது காவலன் திரைப்படத்தைத் திரையரங்குகளிற்கு அனுப்பி வைத்த நடிகர் விஜய் அதனுடன் சேர்த்துத் தனது இரசிகப் பெருமக்களிற்கு கெஞ்சும் ஒளிப்பதிவினையும் அனுப்பிவைத்துள்ளார்.

இங்கு இணைப்பில் இருக்கும் ஒளிப்பதிவில் நடிகர் விஜய் இரசிகர்களிற்கு அனுப்பிவைத்த ஒளிப்பதிவையும், வில்லுப் படம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த வேளையில் பத்திரிகையாளர்களிற்கு அவர் வழங்கிய 'மதிப்பும்' கலவையாக்கப்பட்டுள்ளது. அவ்வொளிப்பதிவு உங்கள் பார்வைக்கு........

சோழர்களினால் முடியாது போனது எதனால்?

Friday, January 14, 2011 · 1 comments

தமிழ் இனத்து மன்னர்களில் பலர் பல்வேறு நாடுகளையும் தங்களின் ஆளுகையின் கீழ் வைத்திருந்து அரசாண்டதாக வரலாற்றுப் புத்தகங்களிலும் ஏடுகளிலும் படித்திருக்கின்றோம். தாய்லாந்து, பர்மா, கம்போடியா வரையும் தமிழர்களின் அரசாட்சி பரந்து விரிந்திருந்ததாகவும் அந்தப் பிரதேசங்களில் காணப்படும் கட்டடக் கலை எச்சங்கள் மற்றும் அகழ்வாராய்ச்சிகள் அதனை எடுத்துக் காட்டுவதாகவும் பல்வேறு நூல்களும் எடுத்துக் கூறுகின்றன. “கடாரம் வென்ற சோழனவன்….” ஏன ஓர் ஈழத்துப் பாடல் ஒன்றும் கூறுகின்றது.

இவ்வாறெல்லாம் பல தேசங்களிற்கும் சென்று அரசாண்ட தமிழர்களால் ஏன் ஒரு குறுகிய இடத்துடன் மட்டுமே நின்றுகொள்ளவேண்டி இருந்துள்ளது. மேலைத் தேயத்தவர்களைப் போல உலகின் அனைத்துப் பகுதிகளையும் சென்று தங்கள் கொடியை நாட்ட ஏன் தமிழ் மன்னர்களினால் முடியாது போனது

சிறுவயதில் வரலாற்றுப் புத்தகங்கள் படிக்கும் போது இக் கேள்வி அடிக்கடி என் மனதில் எழுவதுண்டு. வெளிநாட்டுப்போரியற் கலைகளிற்கு ஈடுகொடுத்துப் போராட எம் தமிழ் மன்னர்களினால் முடியவில்லை என்பதனால் என்று சிலர் வாதம் முன்வைக்கலாம். அவ்வாறாயின் முன்னேற்றமில்லாத தன் போரியல் நுட்பத்தினால் பல காலமாக பண்டாரவன்னியன் தன் பிரதேசத்தின் இருப்பினை வெள்ளையர்களிடம் இழக்காது பாதுகாத்து வைத்திருந்தானே என என் மனம் திரும்பக் கேட்கும் கேள்விக்கு விடை கிடையாது.

பல காலத்திற்குப் பின்னர் மீண்டும் இக் கேள்விகள் என்னை எட்டிப் பார்த்த போது வீதியில் கொட்டிக் கிடந்த பனிகளின் ஊடாக வானிலை அவதானிப்பு நிலையம் விடுத்திருந்த கடுங்குளிர் எச்சரிக்கையைப் புறக்கணித்தவனாக நடந்து கொண்டிருந்தேன்.

காலையில் வீட்டை விட்டு வெளிக்கிடும் போது வானிலை அவதானிப்புப் பற்றிய அறிக்கையைப் பார்க்காது விட்ட எனது மடத்தனம் அப்போது தெரிந்தது. சாதாரண நிலையில் இருந்த குளிர்நிலை சடுதியாக சுழியத்திற்குக் கீழே கிட்டத்தட்ட பதினாறு பாகை செல்சியஸ் குறைந்திருந்தது. கடின குளிருக்குத் தகுந்த மாதிரி உடையணியாது சாதாரண குளிர் தாங்கும் உடையுடன் வெளியே சென்றிருந்த எனக்கு வீடு திரும்பும் போது போதும் போதும் என்றாகிவிட்டது.

அந்த வேளையில் குளிரில் விறைத்திருந்த மண்டையில் மின்னல் அடித்தது போன்று ஒரு உணர்வு. ஏதோ பலநாள் தொலைத்துவிட்ட பொருள் கைகளில் கிடைத்து விட்டது போன்ற ஒரு மகிழ்வு

இக் குளிர்கால நாட்டில் பல ஆண்டுகளாக வசித்துக் கொண்டிருக்கும் என்னால் இக்குளிரினைத் தாங்க முடியாது இருக்கும் போது எவ்வாறு இக் குளிர்பற்றி நேரடியான அனுபவம் எதுவும் இல்லாத எம் முன்னோடித் தமிழ் மன்னர்களினால் தாங்கியிருக்க முடியும். அந்தக் காலத்தில் தமிழர்களிடம் காணப்பட்ட ஆடையமைப்பு இக் கடும் குளிரினைத் தாங்கும் விதத்தில் அமைந்திருந்ததாக என்னால் அறிய முடியவில்லை

சோழர் இராட்சியம் விரிந்திருந்த இடங்கள்
தமிழ் மன்னர்கள் தங்கள் கொடிகளை நாட்டிய நாடுகள் வெப்பமண்டலத்தின் உள்ளேயே அமைந்துள்ளன. வெப்பமண்டல சூழலிற்கு ஏற்ப உடையணிந்து சென்ற மன்னர்கள், தளபதிகள், மற்றும் போர்வீரர்களினால் குளிர்ப் பிரதேச நாடுகளில் தங்கள் வீரத்தினைப் பதிக்க முடியாது போய்விட்டது. ஆயினும் குளிரினைக் கண்டு பழகிய மேற்கத்தேயவர்களினால் வெப்பப் பிரதேசங்களிலும் தங்கள் ஆளுமையை மிகச் சிறப்பாக வெளிக்காட்ட முடிந்துள்ளது. பல நாடுகளையும் தங்கள் வசம் கொண்டுவந்து அனைத்துப் பகுதியிலும் இருந்து படைதிரட்டி வந்த மேலைத்தேய நாட்டவர்களிற்கு எமது மன்னர்களைத் தாக்கி எமது பிரதேசங்களை வசப்படுத்துவது இலகுவாய் அமைந்து விட்டது

இதே போன்ற முறையினிலேயே இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனியப் படைகள் இரசியப் படைகளிடம் தோல்வியடைந்த சந்தர்ப்பமும் எண்ணங்களில் வந்து போனது.

காலநிலையை மனிதர் வெற்றிகொள்ள முனையினும் ஒரு காலத்தில் ஒவ்வொருவர் வாழ்ந்த காலநிலைச் சூழல் அவர்கள் வெற்றியாளர்களாக மாறக் கைகொடுத்துதவியுள்ளது.   

Apple CEO Steve Jobs' 2010 compensation package remains $1

Saturday, January 08, 2011 · 0 comments

Apple Inc. CEO Steve Jobs' compensation package remained the usual $1 in fiscal 2010, but the value of the shares he owns has skyrocketed amid the company's ongoing success with introducing shiny new gadgets many people come to find indispensible.

Apple said in a filing with the Securities and Exchange Commission on Friday it paid a salary of $1 to Jobs, who rejoined the company in 1997 and has overseen the company's explosive growth following the launch of the iPod, the iPhone and now the iPad.

As is customary, Jobs got no bonus or perks during the fiscal year that ended Sept. 25, 2010. Apple said it reimbursed Jobs $248,000 for company travel on his personal jet, a $90 million Gulfstream V he received as a bonus in 1999. This is well above the $4,000 Apple reimbursed its CEO in 2009, when Jobs was on medical leave for nearly six months.

Jobs, however, holds 5.5 million of Apple's shares, which gained about 60 per cent in value during the fiscal year and have continued to rise since. Apple's shares closed at $333.73 on Thursday, bringing the value of Jobs' personal holdings to $1.84 billion.

The company's net income jumped 70 per cent in fiscal 2010 to $14 billion, on revenue of $65.2 billion, an increase of 52 per cent from a year earlier thanks to strong demand for its personal gadgets and Mac computers.

Jobs, 55, has not sold any shares since he rejoined the company in 1997 following a 12-year hiatus. He has not been awarded any new equity since 2003 and is currently its largest individual shareholder. His annual salary has been $1 since 1998.

Top Apple executives, including Jobs, are employed at will, without severance or employment agreements, tax reimbursements or supplemental retirement benefits. The company also does not provide perks to the executives other than those available to non-executive employees, according to the filing.

The Associated Press compensation calculation includes salary, bonus, performance-related bonuses, perks, above-market returns on deferred compensation and the estimated value of stock options and awards granted during the year.


Yahoo News

HuffingtonPost

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator