நினைவை விட்டு அகலாதோர்..

Tuesday, June 14, 2011 · 0 comments

இன்று சனல் 4 தொலைக்காட்சியில் இலங்கையின் மனிதஉரிமை மீறல் தொடர்பான ஒளித்தொகுப்புக் காட்சிகள் வெளியாக உள்ள இவ்வேளையில் மனதில் ஓர் இனம்புரியாத ஓர் உணர்வு. இதைக் கவலை என்பதா, ஆதங்கம் என்பதா, இயலாமை என்பதா என்னவென்றே பொருள்கொள்ள முடியாததாக அனைத்தும் கலந்ததான ஓர் உணர்வு.

ஒரு இனம் தான் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக எத்தனை துன்பங்கள், எத்தனை அவலங்கள். இவற்றையெல்லாம் மதிக்காது ஒரு சில தனிமனிதர்களின் நலனிற்காக ஒரு இனத்தையே எப்படியாக அடக்குகின்றார்கள்.

இந்தவேளையில் இம் மக்களிற்காக, இத் தமிழ் இனத்திற்காக, எமக்காக எம்மில் இருந்து போராடப் புயலாகப் புறப்பட்டு எமக்காய் தம் உயிர்களை உவந்தளித்த அந்த உத்தமர்கள் நினைவுகள் எண்ண அலைகளில் தொடர்கின்றன. தான் வாழவன்று உறவுகள் வாழவேண்டும் என்பதற்காய் தமது ஆசைகளைப் புறந்தள்ளிக் களமாடிக் கண்மூடிய கண்மணிகள் எத்தனைபேர்…

தான் வாழவேண்டும் தன் குடும்பம் வாழவேண்டும் என்று தனக்கு ஆலவட்டம் பிடிக்கும் பலபேர் மத்தியில் தான் சார்ந்த இனத்து மக்கள் முன் சுடுகலன் நீட்டப்பட்ட போதெல்லாம் தம்மைக் கொடையாக்கி அம் மக்களைக் காத்த காவிய வேங்ளைகளின் இனிய முகங்களை எப்படி மறந்தொதுக்க முடியும்… எத்தனை காலம் தான் சென்றாலும் வானும், கடலும், தரையும் உள்ளவரை அவர்கள் முகங்களும் வந்து போகும்…


எதிலும் போராட்டம்....

Wednesday, May 18, 2011 · 0 comments

நியாயமான தனது செயலிற்காகவும் அதை உறுதிப்படுத்துவதற்காகவும் தமிழன் என்றும் போராட வேண்டியுள்ளது. இலங்கைத் தீவிலே தமிழின அழிப்பு உச்சக் கட்டத்தில் நடைபெற்றுக் கொண்டு இருந்த வேளையில் அதனை நிறுத்தக்கோரி பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது தெரிந்ததே. அந்தவகையில் இங்கிலாந்திலே பரமேஸ்வரன் உணவு மறுப்புப் போராட்டத்தில் இறங்கியிருந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் மக்டொனால்ட் உணவினை உட்கொண்டவாறு இருந்தார் எனப் பிரித்தானியப் பத்திரிகைகள் பரமேஸ்வரன் மீது பொய்க்குற்றம் சுமத்தியிருந்தன. அதனை எதிர்த்து அவர் மேற்கொண்ட வழக்கில் வெற்றிபெற்றிருந்தார். அவரது வழக்கு விபரம் தொடர்பான தகவல்களை பிரித்தானி ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது தொலைக்காட்சியில் விபரணமாக ஒளிபரப்பியிருந்தது. அவ்விபரணத் தொகுப்பு இங்கே இணைக்கபட்பட்டுள்ளது.

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator