இன்று தொலைபேசியானது அனைவரதும் அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் முக்கியமான ஒரு பொருளாகிவிட்டது. ஆயினும் அதனைப் பேணிப் பாதுகாப்பதென்பதும் அதனைத் திருத்துவதற்கு ஏற்படும் செலவுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன.
படி 1: கூடிய விரைவில் தண்ணீரில் இருந்து தொலைபேசியை அகற்ற வேண்டும்
படி 2: தொலைபேசி தொழிற்படுகின்றதா எனப் பார்ப்பதற்கு அதனை turn on செய்யக்கூடாது
படி 3: தொலைபேசியில் இருந்து மின்கலம், SIM card மற்றும் நினைவக அட்டை (memory card) ஆகியவற்றினை வேறாக்க வேண்டும்
படி 4: தொலைபேசி மற்றும் ஏனை பாகங்களினைத் துடைத்து இருக்கும் ஈரத்தினை அகற்ற வேண்டும் (தலை துவட்டும் இலத்திரனியல் சாதனம் போன்ற ஏனைய வெப்பப் பிறப்பாக்கிகளைப் பாவிக்கக் கூடாது: இவை மேலதிக ஈரத்தன்மையினை ஏனைய ஈரமற்ற பகுதிகளிற்கும் ஏற்படுத்தும்)
படி 5: ஒரு இறுக்கி மூடக் கூடிய ஒரு கொள்கலனில் அரிசியினை எடுத்து அதனுள் தொலைபேசியை வைத்து இறுக்கி மூடி 12 – 14 மணித்தியாலத்திற்கு வைத்திருக்க வேண்டும். அரிசி தொலைபேசியில் இருக்கும் மேலதிக நீரினை உறிஞ்சிக் கொள்ளும்.
படி 6: இதன் பின்னர் மின்கலத்தினை இணைத்து தொலைபேசி தொழிற்படுகின்றதா என்பதனைச் சரிபார்க்கலாம். இவ்வேளையும் தொழிற்படவில்லை எனின் மின்கலத்தினை அகற்றிவிட்டு தொலைபேசியை மின்னேற்றப் பயன்படும் சாதனத்தை (phone battery charger) தொலைபேசியுடன் இணைத்துத் தொழிற்படுகின்றதா எனப் பார்க்கவேண்டும். அவ்வேளை தொலைபேசி தொழிற்பட்டால் அதன் மின்கலத்தினை மாற்ற வேண்டும்.
இதன் பின்னரும் தொலைபேசி தொழிற்படவில்லையானால் தொலைபேசி திருத்துமிடம் செல்லவேண்டும் அல்லது புதிய தொலைபேசி வாங்க வேண்டும்.
0 comments:
Post a Comment