அண்மைக்காலமா மற்றையவர்களின் வேலையைத் தங்களது வேலையாக உரிமை கோரும் படலாம் வேகமாக நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக வீட்டில் இருந்து கொண்டு இணையத் தளச் செய்திச்சேவை தருகின்றோம் என்று புறப்படுபவர்களின் திருட்டினைச் சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்தவகையில் இன்று ஓர் இணையத்தளத்தில் நடந்த திருட்டினை உங்கள் முன் வைப்பதே இப் பதிவின் நோக்கம்.
கடந்த வார விடுமுறையில் ரொறன்ரோ பெரும் பிராந்தியத்தில் நடைபெற்ற கனடியத் தமிழர் திரைப்படவிழா நிகழ்வு தொடர்பாக அந் நிகழ்வினைப் புகைப்படம் பிடித்தவர் தனது இணையத்தளத்தில் படங்கள் தரவேற்றியிருந்தார். அவ்விணையத்தளத்திலிருந்து அப் படங்களிற்கான இணைப்பு இங்கு உள்ளது நினைவுகள் .
அதேவேளை தமிழ்த்தாய் என்னும் இணையத்தளம் மேலே குறிப்பிட்ட புகைப்படப்பிடிப்பாளரின் தளத்தில் இருந்து அத்தனை படங்களையும் தரவிறக்கித் தங்களது watermark இனை உள்ளீடு செய்து ஏதோ தாங்கள் நிகழ்விற்குச் சென்று பிரத்தியேகமாகப் படங்கள் எடுத்தது போன்று தங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். அவ்விணைப்பு இங்கே.
இப்புகைப்படங்களினைத் தங்களின் watermark உள்ளீடு செய்யாது வெளியிட்டிருப்பின் மற்றையவரிற்கு சொந்தமான புகைப்படங்கள் அவருடையதாகவே இருந்திருக்கும். அதைவிடுத்து அவரது முழுப்புகைப்படத்திற்கும் தங்கள் watermark இனை உள்ளிட்டு அவரது வேலையைத் தங்களதாக்கியுள்ளார்கள். அதன் உரிமையாளரிற்கு குறைந்தது ஒரு நன்றி சொல்லியாவது வெளியிட்டிருக்கலாம். இவர்கள் எல்லாம் சமூகத்திற்கு செய்தி தருகிறார்களாம். இதெல்லாம் ஒரு பிழைப்பு.
0 comments:
Post a Comment