விலையா(போ)கும் ஆண்கள்

Monday, February 07, 2011 ·

தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது இடம்பெற்ற சிறிய சம்பவம் ஆண்கள் விலைபோகின்றார்களோ என்ற கேள்வியை என் மனதிலே எழுப்பியுள்ளது.

திருமணம் என்னும் சந்தையில் ஆண்கள் வியாபாரப் பொருட்கள் ஆவதும் சீதனம் என்னும் பெயரில் பெண்வீட்டுக்காரர் அவர்களை விலைகொடுத்து வாங்குவதும் மிகவும் ஒரு சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டுள்ளது. இவ்வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களினை ஆண்கள் தாங்களே நிர்ணயிக்கின்றார்களா அல்லது அவர்களது பெற்றோர் நிர்ணயிக்கிறார்களா என்பது மிகவும் கேள்விக்குரிய ஒரு விடயமாக உள்ளது.

அதனைவிட ஓர் திருமணமாகும் வயதில் உள்ள ஆணிற்கான விலை தொடர்பாக அவர் வசிக்கும் இடமும் தகுந்த இடம் வகிக்கின்றது. குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களிடையே புலம்பெயர்ந்து மேற்குலகில் வசிக்கும் ஒரு ஆணிற்கு ஒரு விலையும் உள்நாட்டிலேயே இருக்கும் ஆணிற்கு ஒரு விலையும் குறிக்கப்பட்டுள்ளது. அவ்விலையினை விடக் குறைவாக அல்லது சீதனமே வாங்காது ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முன்வந்தால் அவ் ஆணிற்கு ஓதோ ஒரு குறை இருப்பதாகவும் எண்ணுகின்றார்கள்.

இச் சீதனம் என்னும் இடியப்பச் சிக்கலில் அகப்பட்டுப் பலரது வாழ்வும் சீரழிக்கப்பட்டுக் கொண்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையானதும் அனைவரும் அறிந்த உண்மையும் ஆகும். இது தொடர்பாகப் பல கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

இதிலே ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்படும் விடயமானது தனது மகனை மருமகள் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டாள் என ஆணினைப் பெற்ற பெற்றோர் குறைபடுவதும் தமது சகோதரனை அவனின் துணைவி தம்மிடம் இருந்து பிரித்து விட்டாள் என சகோதரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டும் ஆகும்.

என்னைப் பொறுத்தவரையில் இது மிகவும் அடிப்படையில்லாக் குற்றச்சாட்டாகும். திருமணம் என்னும் சந்தையில் ஆண் ஆனவன் விற்கப்பட்டதன் பின்னர் அவ்விற்கப்பட்ட பொருளிற்கான உரிமையும் அதை வாங்கியவரிற்கே சொந்தமாகின்றது. அந்த வகையில் பார்க்கும் போது சீதனம் கைமாற்றல் நடைபெற்றவுடன் அவ் ஆண்மகனானவன் அப் பெண்ணிற்கே சொந்தமாகின்றான். ஆதலால் அவனை அவனது திருமணத்திற்கு முன்னரான வீட்டிலிருந்து பிரித்தெடுத்துக் கொள்ளும் முழு உரிமையும் அப் பெண்ணிற்கு வந்து சேர்கின்றது.

அவ்வாறு பிரித்தெடுக்காது அவ் ஆணின் மீது தாங்களும் உரிமை கொண்டாட வேண்டும் என்று அவனது குடும்பத்தார் முடிவு செய்வார்களேயானால் அவர்கள் சீதனம் என்னும் பேச்சினை எடுக்கக் கூடாது. இச் சீதனப் பேச்சிற்கு ஆண் வீட்டைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பங்களிக்கிறார்கள் என்பது மிகவும் மறுக்க முடியாத உண்மையாகும். தாமும் இவ்வாறு சீதனம் கொடுக்க வேண்டியவர்கள் என்பதை மறந்து அவர்கள் அதில் மும்மரமாக இருப்பது மிகவும் கவலைதரக் கூடிய விடயமாகும்.

அத்துடன்இ சீதனம் வாங்கித்தான் திருமணம் செய்யவேண்டும் என அடம்பிடிக்கும் ஆண்களைச் சோம்பேறிகள் என்றே கொள்ளவேண்டும். தாங்கள் திருமணம் முடித்து மகிழ்வோடு வாழவேண்டும் என்பதற்கா ஒரு பெண் கைநிறையப் பணத்துடன் வரவேண்டும் என எண்ணுவது மிகவும் தவறானதாகும்.


மிகவும் சிறந்த ஓர் காட்சிப்படுத்தல்


பாடல் ஒன்று


eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator