39 மனைவிகள், 94 பிள்ளைகள் மற்றும் 33 பேரப்பிள்ளைகள்

Wednesday, February 23, 2011 · 0 comments

குடும்பத்துடன்....
இந்தியாவின் வடபிரதேசத்தில் உள்ள ஓர் ஊரில் 39 துணைவிமார், 94 பிள்ளைகள் மற்றும் 39 பேரப்பிள்ளைகளுடன் 66 வயது மனிதர் வாழ்ந்து வருகின்றார்.

பர்மா மற்றும் பங்களாதேஸ் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ள மிசோரம் எனனும் மலைப்பகுதிக் கிராமத்திலேயே இவர் வாழ்ந்து வருகின்றார். இவர்கள் அனைவரும் நூறு அறைகளைக் கொண்ட நான்குமாடிக் கட்டடம் ஒன்றிலேயே வாழ்ந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமையறையை மாத்திரம் கொண்டிருக்கும் இக் கட்டடத்தில் இவரது துணைவிகள் முறையெடுத்து சமைத்து வருகின்றனர். திருமணம் முடித்த இவரது மகன்களும் இக் கட்டடத்திலேயே வேறு வேறு அறைகளில் வாழ்கின்றார்கள்.

"நான் ஒரு தடவை ஒரு வருடத்தில் பத்து திருமணங்கள் செய்திருக்கின்றேன்" என்கிறார் இச்சாதனைக்குச் சொந்தக்காரரான சியோனா சானா. அதனுடன் "இப்பொழுது கூட எனது குடும்பத்தினை விரிவுபடுத்துவதற்கு நான் தயாராகவுள்ளேன், திருமணம் செய்வதற்கு எத்தகைய செயலையும் செய்யத்தயாராக இருக்கின்றேன்" என்றார்.

அனைவரும் தங்கும் வீடு...
துணைவியருடன்..

தகவல்: TeleGraph

அலட்சியமாய் இருப்பதன் விளைவு

Thursday, February 17, 2011 · 0 comments

கனடாவில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இராணுவத் தளபதி ஒருவர் தொடராகப் பெண்களது உள்ளாடைகள் திருடியதும் இரண்டு பெண்களைக் கொலை செய்ததும் தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. அதன் பின்னர் அவ் இராணுவத் தளபதி தன் தவறுகளை ஏற்றுக் கொண்டதுடன் அவரிற்கு இரட்டை ஆயுட்தண்டணை வழங்கப்பட்டுள்ளது.
கனடிய முன்னாள் இராணுவ அதிகாரி தொடர்பான செய்திகளின் தொகுப்பிற்கு இங்கே செல்லவும்
http://en.wikipedia.org/wiki/Russell_Williams

இன்று ஒரு தொலைக்காட்சித் தொடரினைப் பார்த்த போது கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு நிகழ்வு இந்தியாவின் மாநிலம் ஒன்றில் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்திருந்தார்கள். அவ்வொளித்தொகுப்பினை கீழுள்ள இணைப்பில் பார்வையிடலாம்.


அத்துடன் இதற்கு ஓர் காரணமாக அமையும் நிகழ்வு ஒன்று தொடர்பாக நான் முன்னர் எழுதிய ஆக்கம் ஒன்றினை கீழுள்ள இணைப்பில் காணலாம்.

"சிறுவர்களும் உறவினர்களும்"http://justopentalk.blogspot.com/2010/02/blog-post_24.html

உலகக் காதலர் தினம்

Tuesday, February 15, 2011 · 0 comments

பிறக்கின்ற ஒவ்வொரு ஆண்டிலும்
பெப்ரவரி 14ம் திகதி
பூமிப்பந்தின் நாடுகளெல்லாம்
பூப்பெய்திய திருக்கோலம்



உலகக் காதலர் தினம்

வான வேடிக்கைகளின் பவனி
வாழ்த்து மடல்களின் பரிமாற்றம்
இதழ்களின் முத்த முத்திரியை
விருப்பமுடன் இடம்மாற்றும்
லீலைகளில் காதலர்கள்

காதல்தான் உலகம்
காதல்தான் வாழ்க்கை
காதல்தான் உயிர்
காதல்தான் மனிதன் என
ஊடகங்களின் மொத்தமான
உரத்த பறையடிப்பு

சர்வம் காதல் மயம் - என்னும்
கோசத்தை ஏந்தி
சங்கீதமாய் உலாவரும்
அன்றைய காற்று

இளமைதான் தேசங்களின்
இயங்கு நிலைச் சக்தி - இருந்தாலும்
அவர்களுக்கும் காதல்தானாம் முத்தி

சூரியனின் காதல்தான் தாமரை
பனித்துளியின் காதல்தான் புல்நுனி
நேரிய நல்வாழ்க்கைப் பாதைக்கே
நிழல்தரும் மேகங்கள் காதல்தானாம்

காதல் ஒரு கடவுள்
தொடுகை இல்லை
தெரிவதில்லை
நுகர்வதில்லை
அறிதலில்லை
உணர்தல் மட்டுமே முடியும்

அன்றுதான் சந்தோச ரேகைகள்
உலகெங்கும் பரவும் நாள்
மத்தாப்பாய் இன்பங்கள்
மனசெங்கும் நிரவும் நாள்
காற்று மண்டலக் கூடுகளிலெல்லாம்
கனவுப் பறவைகள் குடிபுகும் நாள்

இதுபோலத்தான் அன்றும்
ஆண்டு 2001
பெப்ரவரி 14
உலகத்து நாடுகளிலெல்லாம்
அன்றும் தான் காதலர்தினம்
உள்ள+ரில்
தமிழர்களிற்கு மட்டும்
ஓய்வான காலமது

பூமித்தாயின் நெற்றிப் பொட்டாய்
உருவாகத் துடிக்கின்ற ஒரு நாடு
தமிழீழம்
ஆமி என்னும் சிங்களப் படைகளினால்
ஆக்கிரமித்தல் கண்ட ஒரு நாடு
தமிழீழம்

உலகெங்கும் அன்று காதலர்தினம்
உள்ள+ரில் தமிழரிற்கு ஓய்வான காலம்

உலகத்தை எங்கள் மேல்
கவனிக்கச் சொல்லி
ஒருதலைப் பட்சமாய்
போரோய்வு பேணி
அழிவுள்ளும் சலியாது
வாழ்கின்ற தமிழர்
அன்றைக்கும் அமைதியாய்
இருந்திட்ட காலம்

பளைப்பகுதியின் காவலரண்
துப்பாக்கி இருந்தும்
சுடாத எம் படையணிகள்
அழைப்பின்றி வருகின்ற
பகைவரது முன்னேற்றம்
ஆறுதலாய் கவனிக்கும்
எம்மவரின் மதிநுட்பம்

இருந்தாலும் என்ன செய்வது?

பேரினவாதிகளின் பெருஞ்சமருக்காய்
எறிகணைகள் மழையாகி
ஊரையே உலுக்கியது

எம்மவரும் பாதுகாப்பாய்
நிலையெடுக்கும் நேரத்தில்
ஒவ்வொரு வெடியதிர்வும்
உள்நுழையத் தொடங்கியது

அம்மா….

என் நண்பன் ஒருவனது
உயிர் உறையும்
ஒர் அலறல்

கரும்புகை மண்டலத்தில்
கண்ட காட்சியிலும் கரிப்படிவு
ஒரு கால் சிதைந்த நிலையில்
என் போராளித் தோழனின் திருவுருவம்
காலில் இருந்து குருதியும்
முகத்தில் இருந்து வியர்வையும் வழிந்தபோதும்
புரட்சியின் தூய்மையை
அந்த உருவம்
சிந்திக் கொண்டிருந்தது

“நாம் சண்டையை விரும்பவில்லை
உயிர்வாழ வேண்டுமானால்
சண்டையை விட வேறுவழியில்லை”
அவன் அணிந்திருந்த
வரிச்சீருடையில் மறைந்திருந்த வரிகள்
இதுதானோ

இரவு வானொலிச் செய்திகளில்
இதயங்களை மகிழ்வித்த
காதலர் தினம்
சிறப்பு நிகழ்ச்சிகளாய்

உண்மைதான்

உலகெல்லாம் அன்று
காதலர் தினம்
என் உயிர்த் தோழனுக்கோ
அது கால் இழந்த தினம்

இப்படித்தான் எங்களது வாழ்க்கைப்பாடு
இனி வருகின்ற
மனித உரிமைகள் தினத்தன்று
எங்கள் உயிர்கூடப் பறிக்கப்படலாம் - ஆனால்
ஈழத்தமிழனை ஒருபோதும்
காலச் சருகுகள் மூடாது – மாறாக
காலைச் சூரியன்
தினம் பாடும்

-கவியாக்கம்: கு.வீரா

தவறான வழித்தடத்தில் கார் ஓட்டிய 83 வயது முதியவர்

Thursday, February 10, 2011 · 0 comments

ஐக்கிய அமெரிக்காவில் கலிபோர்ணியா மாநிலத்தின் நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் ஓடும் பக்கத்திற்கு எதிராக தனது வாகனத்தினை 83 வயதுள்ள முதியவர் வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். இக் காட்சியினை அவ்வீதியில் பயணம் செய்த இன்னொருவர் தனது தொலைபேசி மூலம் ஒளிப்படமாக்கியுள்ளார்.

மிகவும் ஆபத்தான இவ்வாகன ஓட்டுதலின்போது அம் முதியவர் இன்னொரு வாகனத்துடன் மோதி அதன் பின் வீதியைப் பிரிக்கும் தடுப்புச் சுவருடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார். இச்சம்பவத்தின் போது எவரும் பாரிய காயங்களிற்கு உள்ளாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


விலையா(போ)கும் ஆண்கள்

Monday, February 07, 2011 · 1 comments

தொலைபேசி உரையாடல் ஒன்றின் போது இடம்பெற்ற சிறிய சம்பவம் ஆண்கள் விலைபோகின்றார்களோ என்ற கேள்வியை என் மனதிலே எழுப்பியுள்ளது.

திருமணம் என்னும் சந்தையில் ஆண்கள் வியாபாரப் பொருட்கள் ஆவதும் சீதனம் என்னும் பெயரில் பெண்வீட்டுக்காரர் அவர்களை விலைகொடுத்து வாங்குவதும் மிகவும் ஒரு சாதாரண நிகழ்வாகிப் போய்விட்டுள்ளது. இவ்வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களினை ஆண்கள் தாங்களே நிர்ணயிக்கின்றார்களா அல்லது அவர்களது பெற்றோர் நிர்ணயிக்கிறார்களா என்பது மிகவும் கேள்விக்குரிய ஒரு விடயமாக உள்ளது.

அதனைவிட ஓர் திருமணமாகும் வயதில் உள்ள ஆணிற்கான விலை தொடர்பாக அவர் வசிக்கும் இடமும் தகுந்த இடம் வகிக்கின்றது. குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்களிடையே புலம்பெயர்ந்து மேற்குலகில் வசிக்கும் ஒரு ஆணிற்கு ஒரு விலையும் உள்நாட்டிலேயே இருக்கும் ஆணிற்கு ஒரு விலையும் குறிக்கப்பட்டுள்ளது. அவ்விலையினை விடக் குறைவாக அல்லது சீதனமே வாங்காது ஒரு ஆண் ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முன்வந்தால் அவ் ஆணிற்கு ஓதோ ஒரு குறை இருப்பதாகவும் எண்ணுகின்றார்கள்.

இச் சீதனம் என்னும் இடியப்பச் சிக்கலில் அகப்பட்டுப் பலரது வாழ்வும் சீரழிக்கப்பட்டுக் கொண்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையானதும் அனைவரும் அறிந்த உண்மையும் ஆகும். இது தொடர்பாகப் பல கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

இதிலே ஒன்றுக்கொன்று முரணாகக் காணப்படும் விடயமானது தனது மகனை மருமகள் தன்னிடம் இருந்து பிரித்துவிட்டாள் என ஆணினைப் பெற்ற பெற்றோர் குறைபடுவதும் தமது சகோதரனை அவனின் துணைவி தம்மிடம் இருந்து பிரித்து விட்டாள் என சகோதரர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டும் ஆகும்.

என்னைப் பொறுத்தவரையில் இது மிகவும் அடிப்படையில்லாக் குற்றச்சாட்டாகும். திருமணம் என்னும் சந்தையில் ஆண் ஆனவன் விற்கப்பட்டதன் பின்னர் அவ்விற்கப்பட்ட பொருளிற்கான உரிமையும் அதை வாங்கியவரிற்கே சொந்தமாகின்றது. அந்த வகையில் பார்க்கும் போது சீதனம் கைமாற்றல் நடைபெற்றவுடன் அவ் ஆண்மகனானவன் அப் பெண்ணிற்கே சொந்தமாகின்றான். ஆதலால் அவனை அவனது திருமணத்திற்கு முன்னரான வீட்டிலிருந்து பிரித்தெடுத்துக் கொள்ளும் முழு உரிமையும் அப் பெண்ணிற்கு வந்து சேர்கின்றது.

அவ்வாறு பிரித்தெடுக்காது அவ் ஆணின் மீது தாங்களும் உரிமை கொண்டாட வேண்டும் என்று அவனது குடும்பத்தார் முடிவு செய்வார்களேயானால் அவர்கள் சீதனம் என்னும் பேச்சினை எடுக்கக் கூடாது. இச் சீதனப் பேச்சிற்கு ஆண் வீட்டைச் சேர்ந்த பெண்கள் அதிகம் பங்களிக்கிறார்கள் என்பது மிகவும் மறுக்க முடியாத உண்மையாகும். தாமும் இவ்வாறு சீதனம் கொடுக்க வேண்டியவர்கள் என்பதை மறந்து அவர்கள் அதில் மும்மரமாக இருப்பது மிகவும் கவலைதரக் கூடிய விடயமாகும்.

அத்துடன்இ சீதனம் வாங்கித்தான் திருமணம் செய்யவேண்டும் என அடம்பிடிக்கும் ஆண்களைச் சோம்பேறிகள் என்றே கொள்ளவேண்டும். தாங்கள் திருமணம் முடித்து மகிழ்வோடு வாழவேண்டும் என்பதற்கா ஒரு பெண் கைநிறையப் பணத்துடன் வரவேண்டும் என எண்ணுவது மிகவும் தவறானதாகும்.


மிகவும் சிறந்த ஓர் காட்சிப்படுத்தல்


பாடல் ஒன்று


பேசா வார்த்தைகள்

· 0 comments

இரண்டு உள்ளங்களிற்கிடையே பேசப்படாத வார்த்தைகள் பேசப்படும் போது....

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator